ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் முனைவர் பட்டப்படிப்பு
Apply Nowகோவை பாலக்காட்டுச் சாலை நவக்கரையில் அமைந்துள்ள ஏ.ஜே.கே கலை அறிவியல் கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகம், தமிழக அரசின் அங்கீகாரத்துடன் பல்கலைக்கழக மானியக்குழுவின் 2F 12B தகுதிப் பெற்ற கல்லூரி. தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினரால் A+ அங்கீகாரம் கிடைத்தது கல்லூரியின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன. கடந்த 16 ஆண்டுகளாக சிறப்பான முறையில் கிராமப்புற மற்றம் நகர்ப்புற மாணவர்களின் மேம்பாட்டிற்குக் கல்விச் சேவை ஆற்றி வரும் எமது கல்லூரி ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்ற இருபாலர் பயிலும் கல்லூரியாகும். மாணவர்களின் படைப்பாக்கத்திறனை ஊக்குவிக்கும் வகையிலும், தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும் அந்தந்தப் பாடத்திட்டங்களில் மேம்பட்ட கல்வி அறிவை வழங்கி மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
ஏஜேகே கல்லூரியின் தமிழ்த்துறை முனைவர் பட்டப்படிப்பு ஆராய்ச்சி மையம் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. முனைவர் பட்டம் என்பது ஆய்வாளர்களின் மிகப்பெரிய அங்கீகாரம். தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம், வரலாறு போன்ற துறைகளில் ஆழ்ந்து அர்பணிப்புடன், ஆழமான புரிதலுடன், கவனத்துடன்,; விரிவான அறிவுச்சார்ந்த ஆய்வை செய்வது முனைவர் நிலை ஆய்வுப்பட்டம்; ஆகும்.
தமிழ் இலக்கியத்தில், செம்மொழி இலக்கியம், செவ்விலக்கியம், காப்பிய இலக்கியம், நவீன இலக்கியம், வரலாறு, மொழியியல், நாட்டுப்புறவியல், தொல்லியல், தத்துவம், மானுடம் போன்ற பாடத்திட்டங்களில் ஆய்வை மேற்கொள்ளும்போது தமிழ்ச் சமூகத்தின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், கலாச்சாரம் போன்றவற்றை ஆழ்ந்துப் படிக்க முடியும்.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வுகளை மேற்கொள்ள உதவிகள் செய்வது, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கணினி மற்றும் இணையம் தொடர்பான ஆய்வுகள், தமிழில் மென்பொருளை உருவாக்குதல், தகவல் பரிமாற்றம் போன்ற ஆய்வுகளின் மூலம் ஆய்வாளர்களின் அனுபவமும், ஆழ்ந்துக் கற்றலும் வெளிப்படும். இம்மாதிரியான ஆய்வுகளை ஊக்குவித்து வருங்கால ஆய்வுகளுக்கும் வழிவகுத்து வரும் வளரும் தலைமுறையினரிடையே தமிழ் மொழியின் தொன்மையையும், பண்புகளையும் அறிந்து கொள்ள உதவும் வகையில் மேம்பட்ட ஆய்வுக்கு உதவுகிறது எமது ஏஜேகே கல்லூரி. ஆய்வில் கடினமாக பலதரப்பட்ட சிக்கல்களை இலக்காகக் கொண்ட ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான திறனை உருவாக்கித்தருகிறது. தமிழ்த்துறையில் நடத்துகின்ற உலகளவிலான, தேசிய அளவிலான கருத்தரங்குகள், ஆய்வுக்கோவை வெளியிடல் போன்றவை ஆய்வு மாணவர்களின் ஆய்வை இன்னும் மேம்பட வழிவகுக்கும்.